கழுத்தை அறுத்து வக்கீல் குமாஸ்தா தற்கொலை முயற்சி

நெல்லை அருகே வக்கீல் குமாஸ்தா தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கழுத்தை அறுத்து வக்கீல் குமாஸ்தா தற்கொலை முயற்சி
Published on

நெல்லை அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). இவருக்கு திருமணம் ஆகி 1 வயதில் குழந்தை உள்ளது. சரவணன் நெல்லையில் வக்கீல் குமாஸ்தாவாக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி நேற்று முன்தினம் மதியம் பாளையங்கோட்டையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு குழந்தையுடன் சென்றார்.

நேற்று காலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது சரவணன் கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சரவணன் கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் அவர் தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து சிவந்திபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com