பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வக்கீலுக்கு 10 ஆண்டு சிறை

விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலைச் சேர்ந்த வக்கீல் ஒருவர், ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தார்.
பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வக்கீலுக்கு 10 ஆண்டு சிறை
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலைச் சேர்ந்த வக்கீல் சிவராஜ் (வயது 33), கடந்த 2016-ம் ஆண்டு ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்த புகாரின்பேரில் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மகளிர் கோர்ட்டு நீதிபதி வினோதா, சிவராஜுக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு சார்பில் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் அவர் உத்தரவிட்டார். பின்னர் சிவராஜ் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com