கோர்ட்டை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

பட்டுக்கோட்டையில் கோர்ட்டை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோர்ட்டை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
Published on

பட்டுக்கோட்டை:

இ-பைலிங் முறையை உடனடியாக வாபஸ் பெறக்கோரி சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டை வலியுறுத்தி பட்டுக்கோட்டையில் வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வக்கீல்கள் கோர்ட்டு வாசலில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல்கள் சங்கத் தலைவர் மாஸ்கோ தலைமை தாங்கினார். செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோவிந்தராஜ், துரைராசு,செல்வராஜ், அறிவழகன், சுசித்ரா, சுமதி, உஷா, பிரபாகரன், லட்சுமணன், ஜீவானந்தம், கருப்பையன் உள்பட 50-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் பட்டுக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 நீதிமன்றங்களில் பணிகள் பாதிக்கப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com