வழக்குகளை வேறு கோர்ட்டுக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து வாயில் கருப்பு துணி கட்டி வக்கீல்கள் போராட்டம்

பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட 13 கிராம எல்லைக்குட்பட்ட வழக்குகளை மாதவரம் கோர்ட்டுக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து வாயில் கருப்பு துணி கட்டி வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
வழக்குகளை வேறு கோர்ட்டுக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து வாயில் கருப்பு துணி கட்டி வக்கீல்கள் போராட்டம்
Published on

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டு, சார்பு கோர்ட்டு, குற்றவியல் கோர்ட்டுகள், மாவட்ட உரிமையியல் கோர்ட்டு என 6 கோர்ட்டுகள் இயங்கி வருகின்றன. பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட 13 கிராம எல்லைக்குட்பட்ட வழக்குகளை மாதவரம் கோர்ட்டுக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொன்னேரியில் உள்ள 6 கோர்ட்டுகளை சேர்ந்த வக்கீல்கள் வாயில் கருப்பு துணி கட்டி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வாயில் கருப்பு துணி கட்டியபடி கோர்ட்டுக்கு சென்று வழக்கு விசாரணையில் வாதிடாமல் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

எனவே பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட 13 கிராம எல்லைக்குட்ட வழக்குகளை மாதவரம் கோர்ட்டில் இணைக்கும் முடிவை கைவிட்டு பொன்னேரியில் உள்ள கோர்ட்டுகளிலேயே வழக்குகளை தொடர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வக்கீல்கள் கோரிக்கை வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com