

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் மற்றும் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று பழனியில், ஒருங்கிணைந்த கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பழனி வக்கீல் சங்க தலைவர் கணேசமூர்த்தி தலைமை தாங்கினார். மூத்த வக்கீல் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். இதில் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டு மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கோஷமிட்டனர்.