

செங்கோட்டை:
செங்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞாகள் சங்கம் சார்பில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள முப்பெரும் சட்ட பிரிவுகளை மாற்றம் செய்வதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவா ஆ.வெங்கடேசன் தலைமை தாங்கினார். துணைத்தலைவா முத்துக்குமாரசாமி, செயலாளா அருண், பொருளாளா மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனா. மூத்த வழக்கறிஞா கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார். இதில் வக்கீல்கள் சங்கரலிங்கம், ஆதிபாலசுப்பிரமணியன், இளங்கோ, சிதம்பரம், சத்தியசங்கர், நல்லையா, சுபசேகர், ஆசாத், வெங்கடேஷ், முகம்மதுசிராஜ், ராமலிங்கம், குமார், வீரபாண்டியன், வைரவன், ராஜா, சிவசுந்தரவேலன், முத்துராஜ், மாலதி, இசக்கிஇந்திரா, கலீலா உள்பட பலா கலந்து கொண்டனா.