பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர்கள் கைது: சீமான் கண்டனம்

எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் அமலாக்கத்துறையின் சோதனை மற்றும் கைது நடவடிக்கைக்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர்கள் கைது: சீமான் கண்டனம்
Published on

சென்னை,

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆகிய அமைப்புகளைக் குறிவைத்து மத்திய அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்றவற்றின் மூலம் மத்திய பா.ஜ.க. அரசு நாடெங்கிலும் அத்துமீறிய சோதனைகளையும், கைது நடவடிக்கைகளையும் பாய்ச்சி, அவற்றை முடக்க நினைப்பது ஜனநாயகப் படுகொலையாகும்.

ஜனநாயக பாதையில் இயங்கும் மக்கள் ஆதரவு இயக்கங்களான எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆகியவற்றின் மதவாதத்துக்கெதிரான தொடர் செயல்பாடுகளையும், கருத்து பரப்புரைகளையும் தாங்க முடியாது, அதிகாரப்பலம்கொண்டு அந்த இயக்கங்கள் மீது ஏவப்படும் மிகமோசமான அடக்குமுறைகளும், எதேச்சதிகாரப்போக்குகளும் அப்பட்டமான பழிவாங்கும் போக்கேயாகும்.

மதவாத அரசியலையும், பாசிசப்போக்கையும் கட்டவிழ்த்துவிட்டு, நாட்டை மதத்தால் துண்டாட நினைக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் அநீதி செயல்பாடுகளுக்கு எதிராக இருப்பதனாலேயே, எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆகிய இயக்கங்களின் தலைவர்கள் கைதுசெய்யப்படுவதும், அவர்களது இடங்களில் சோதனைகள் நிகழ்த்தப்படுவதுமான சதிச்செயல்கள் அரங்கேற்றப்படுகின்றன. இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com