ஓட்டை, உடைசல் பேருந்துகள்: திமுக அரசுக்கு தவெக கண்டனம்

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என அருண்ராஜ் என தெரிவித்துள்ளார்.
ஓட்டை, உடைசல் பேருந்துகள்:  திமுக  அரசுக்கு தவெக  கண்டனம்
Published on

சென்னை,

தவெக கொள்கைப் பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறும் அனைவரும் நலமடைய பிரார்த்தனை செய்கிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும்.

நிர்வாகத் திறமை இல்லாமல் ஓட்டை, உடைசல் பேருந்துகளை வைத்து காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு.!

அரசுப் பேருந்துகளை இயக்க ஓட்டுநர்கள் சிரமப்படுகிறார்கள். தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் அரசு பேருந்து சேவையை இப்படி மோசமாக பாதுகாப்பு இல்லாமல் கையாள்வதா?

மகளிருக்கு இலவச பயணம் கொடுத்து விட்டோம் என்று மட்டும் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த பேருந்துகள் நல்ல முறையில் இயங்குகிறதா என்பதை ஒரு முறையேனும் கவனித்தாரா?

ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்துத் துறையில், ஊழல் செய்து மேலும் எப்படி நஷ்டத்தில் தள்ளுவது என்ற ஒரே குறிக்கோளுடன் செயல்படும்அமைச்சருக்கு இதெல்லாம் எப்படி புரியும்?

மக்களின் உயிர்கள் அவ்வளவு இழிவாக போய் விட்டதா இந்த திமுக அரசுக்கு?

வருகிற தேர்தலில் மக்களின் உயிர் மீது அக்கறை இல்லாத திமுக ஆட்சியை விரட்டியடிக்க வேண்டும் என மக்கள் உறுதி ஏற்று இருக்கிறார்கள்.! என தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com