

சென்னை,
கொரோனா வைரஸ் தொடர்பாக மத்திய-மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 15-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் காவல்துறை அனுப்பிய நோட்டீசை ஏற்றுக்கொண்டு, காணொலி காட்சி மூலம் தி.மு.க. அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தியது. அதன்படி கடந்த 16-ந்தேதி, காணொலிக்காட்சி மூலம் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது.
இந்தநிலையில் மீண்டும் ஒரு அனைத்துக்கட்சி கூட்டத்தை தி.மு.க. அறிவித்துள்ளது. காணொலிக்காட்சி மூலம் நடைபெறும் இக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 31-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணியளவில் அனைத்துக்கட்சி கூட்டம் காணொலிக்காட்சி வழியாக நடைபெறும். மருத்துவ கல்வியில் இட ஒதுக்கீட்டை மறுக்கும் மத்திய அரசின் செயல்பாடுகள், கொரோனா நோய் தடுப்பும் மத்திய-மாநில அரசின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.