சட்ட விழிப்புணர்வு முகாம்

கடையம் அருகே சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
சட்ட விழிப்புணர்வு முகாம்
Published on

கடையம்:

அம்பை வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கடையம் யூனியன் மந்தியூர் ஊராட்சி ராமலிங்கபுரத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணசுந்தரம் வரவேற்றார். அம்பை வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமான செந்தில்குமார் தலைமை தாங்கினார். மூத்த வழக்கறிஞர்கள் ராஜேந்திரன், ஜோயல் ஹென்றி, ஜெகன் ஸ்ரீநாத், ரமேஷ், சரவணநாதன், ராதிகா, பிரம்மநாயகி ஆகியோர் முன்னிலை வைத்தனர். முடிவில், வக்கீல் இசேந்திரன் நன்றி கூறினார். முகாமில் ஊர் நாட்டாமைகள் பி. மாரியப்பன், ஆர்.மாரியப்பன், கவுன்சிலர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com