தொழிலாளர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்

தொழிலாளர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் பெரம்பலூரில் நடைபெற்றது.
தொழிலாளர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்
Published on

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தொழிலாளர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் பெரம்பலூரில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான சந்திரசேகர் தலைமை தாங்கி, தொழிலாளர்களுக்கான சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் அவர் கூறுகையில், தொழிலாளர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் புகார் அளித்தால், அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று தரப்படும். சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெற 1800 425 2441 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம், என்றார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் பட்டியல் வக்கீல் செல்வம் சட்ட கருத்துரை வழங்கினார். அரியலூர் தொழிலாளர் உதவி ஆய்வாளர் சம்பத், குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கதிரவன் வாழ்த்துரை வழங்கினார். இதில் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் முதுநிலை நிர்வாக உதவியாளர் கலைவாணன் வரவேற்றார். முடிவில் மேசியா தெழிலாளர் நல சங்கத்தின் பொதுச் செயலாளர் டேனியல் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com