சட்ட விழிப்புணர்வு முகாம்

தாராபுரத்தை அடுத்த கொளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
சட்ட விழிப்புணர்வு முகாம்
Published on

தாராபுரம்

தாராபுரத்தை அடுத்த கொளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு தாராபுரம் வட்ட சட்ட பணிக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தாராபுரம் வட்ட சட்ட பணிக்குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான எம்.தர்மபிரபு தலைமை தாங்கினார்.

அப்போது தாராபுரம் குற்றவியல் நடுவர் எஸ்.பாபு 'போக்சோ' சட்டம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் மாவட்ட உரிமையியல் நீதிபதி மதிவதனி வணங்காமுடி போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உளவியல் நிபுணர் கவுதம் நடராஜன் மாணவர்களுக்கு ஏற்படும் மன குழப்பத்தை எவ்வாறு போக்குவது, மனக்கட்டுப்பாட்டை எவ்வாறு வளர்த்து கொள்வது என்று மாணவர்களுக்கு விரிவாக எடுத்துக்கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com