

எம்.எல்.ஏ.க்களை முற்றுகையிட்டதால் பரபரப்பு
அரியலூர்
மாணவி அனிதாவின் உடல் மருத்துவமனைக்கு எடுத்து வந்தபோது பேரவை உறுப்பினர்கள் முற்றுமையிடப்பட்டனர்.
அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மாணவி அனிதாவின் உடல் கொண்டு வரப்பட்டதை அறிந்ததும், அங்கு அரசு தலைமை கொறடா தாமரை.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., குன்னம் எம்.எல்.ஏ. ஆர்.டி.ராமச்சந்திரன் ஆகியோர் சென்றனர். அப்போது அங்கு சோகத்துடன் நின்று கொண்டிருந்த மாணவியின் உறவினர்கள், கிராம மக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் சேர்ந்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவி அனிதாவின் உடலை பார்க்க அவர்களை உள்ளே விடாமல் கோஷம் எழுப்பினர்.
பின்னர் உறவினர்கள் உள்ளிட்டோர் நீட் தேர்வு விவகாரத்தில் நீதி கிடைக் கும் வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட செய்தனர்.
இதற்கிடையே பிரேத பரிசோதனை நடந்த போது ஆஸ்பத்திரி வளாகத்திலேயே மாவட்ட கலெக்டர் லட்சுமிபிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்குமார் ஆகியோர் அங்கேயே நின்று கொண்டு இருந்தனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.