பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரர் கோவிலில் பூஜைக்கு வைக்கப்பட்ட எலுமிச்சை பழம் ரூ. 13 ஆயிரத்திற்கு ஏலம்

வெள்ளி மோதிரத்தை பரமசிவன் என்பவர் ரூ. 33 ஆயிரத்திற்கு ஏலத்தில் வாங்கினார்.
பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரர் கோவிலில் பூஜைக்கு வைக்கப்பட்ட எலுமிச்சை பழம் ரூ. 13 ஆயிரத்திற்கு ஏலம்
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் சிவகிரியை அடுத்த புது அண்ணாமலை பாளையத்தில் புகழ்பெற்ற பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரர் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் நேற்று முன் தினம் சிவராத்திரையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூஜையின்போது எலுமிச்சை பழம், வெள்ளி நாணயம், வெள்ளி மோதிரம் போன்றவை வைக்கப்பட்டன. இவை பூஜைக்குப்பின் பொதுமக்களிடம் ஏலத்திற்கு விடப்பட்டன.

பூஜையின்போது வைக்கப்பட்ட பொருட்களை பக்தர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தனர். அதில், பூஜையில் வைக்கப்பட்ட ஒரு எலுமிச்சை பழத்தை விஸ்வநாதன் என்பவர் ரூ. 13 ஆயிரத்திற்கு ஏலத்தில் வாங்கினார்.

அதேபோல், வெள்ளி நாணயத்தை துரை என்பவர் ரூ. 43 ஆயிரத்திற்கு ஏலத்தில் வாங்கினார். அதேபோல், வெள்ளி மோதிரத்தை பரமசிவன் என்பவர் ரூ. 33 ஆயிரத்திற்கு ஏலத்தில் வாங்கினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com