கோடை வெப்பத்தின் தாக்கத்தால் எலுமிச்சை பழம் விலை உயர்வு

கோடை வெப்பம் மற்றும் பருவநிலை மாற்றத்தால் எலுமிச்சை விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது.
கோடை வெப்பத்தின் தாக்கத்தால் எலுமிச்சை பழம் விலை உயர்வு
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுப்புற பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாகும். இங்கு ஒரு சில பகுதியில் எலுமிச்சை சாகுபடி நடைபெற்று வருகிறது. ஆனால் கோடை வெப்பம் மற்றும் பருவநிலை மாற்றத்தால் எலுமிச்சை விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனால் தென்காசி மாவட்டம் புளியங்குடி, திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை, ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் இருந்து எலுமிச்சை பழம் இங்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கிலோ ரூ.150 முதல் ரூ.180 வரை தரத்திற்கு ஏற்றவாறு விற்பனையாகி வருகிறது. பயன்பாடு அதிகரிப்பு, விளைச்சல் மற்றும் வரத்து குறைவாக உள்ளதால் விலையும் உயர்ந்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com