கம்பி வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு

கோயம்புத்தூரில் கம்பி வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கோயம்புத்தூர்,

கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை வனப்பிரிவுக்கு உட்பட்ட எட்டிமடை அருகே உள்ள ஐயர்பதி பகுதியில், கம்பி வேலியில் சிக்கிய நிலையில் ஒரு சிறுத்தை இறந்துக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர் இணைந்து, இறந்த சிறுத்தைக்கு உடற்கூறு பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தகவலின்படி, சிறுத்தை தப்பிக்க முயன்றபோது கம்பி உடலில் ஆழமாக புகுந்து, அதிக ரத்தக்கசிவு அல்லது உட்புற உறுப்புகள் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும், உயிரிழப்பிற்கான இறுதி காரணம் உடற்கூறு பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே உறுதி செய்யப்படும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் கம்பி வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com