

நீலகிரி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அட்டடி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் குடியிருப்பு பகுதிக்குள் நேற்று இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று அப்பகுதிகளில் பரவியதை தொடர்ந்து கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அந்த வீடியோவில், குன்னூர் அருகே உள்ள அட்டடி என்ற கிராமத்தில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதிக்குள் இரவு நேரத்தில் உணவு தேடி உலா வந்த ஒரு சிறுத்தை, அங்கிருந்த ஒரு நாயை வேட்டையாட முயன்று, அது முடியாத காரணத்தால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வது போல இருந்தது.
சிறுத்தை ஊருக்குள் உலா வந்த வீடியோவை பார்த்த அட்டடி கிராம மக்கள், இரவு நேரங்களில் உணவு தேடி மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை வந்ததால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே சிறுத்தை போன்ற காட்டு விலங்குகள், மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் தடுக்க, வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.