மயிலாடுதுறையில் மேலும் ஒரு ஆட்டை அடித்துக் கொன்ற சிறுத்தை

மயிலாடுதுறையில் சுற்றித்திரியும் சிறுத்தை மேலும் ஒரு ஆட்டை அடித்துக் கொன்றுள்ளது.
மயிலாடுதுறையில் மேலும் ஒரு ஆட்டை அடித்துக் கொன்ற சிறுத்தை
Published on

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் கடந்த 3ம் தேதி வெளியாகின.

இதையடுத்து, சிறுத்தையை பிடிக்க போலீசார், வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் களமிறங்கினர். சிறுத்தை நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் அத்தியாவசிய காரணமின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சிறுத்தை தென்பட்டால் 9360889724 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறுத்தையை பிடிக்கும்பணி இன்று 4வது நாளாக நீடித்து வருகிறது. சிறுத்தையை பிடிக்க ராட்சத வலை, கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மயிலாடுதுறை ரெயில்வே ஜங்ஷனில் உள்ள 5வது நடைமேடையில் ஆடு ஒன்றின் உடல் பாகங்கள் சிதறி கிடந்தன. இந்த ஆட்டை சிறுத்தை வேட்டையாடியுள்ளது. இதையடுத்து இன்று காலை அங்கு வந்த வனத்துறையினர் சிதறி கிடந்த ஆட்டின் பாகங்கள் ஆய்வு செய்து சிறுத்தை அருகே எங்காவது பதுங்கி உள்ளதா? என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். அதேவேளை, சிறுத்தையின் புகைப்படம் தற்போது சிக்கியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com