வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் உலா வந்த சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்

சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் உலா வந்த சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்
Published on

கோவை,

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த ஐயர்பாடி மற்றும் ரொட்டிக்கடை பகுதிகளில் யானை, கரடி, சிறுத்தைகள் இரவு நேரங்களில் மட்டும் அல்லாமல் பகலிலும் உலா வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு ஐயர்பாடி துணை மின் நிலையம் அருகில் இரவு நேரத்தில் சர்வ சாதாரணமாக சாலையை கடந்து கம்பீரமான நடையுடன் சிறுத்தை சென்றுள்ளதை கண்ட சுற்றுலா பயணிகள் படம்பிடித்து தற்போது வலைத்தளங்களில் பரப்பி உள்ளனர். அது வைரலாகி வருகிறது.

எனவே வனத்துறை இதனை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு சிறுத்தைகளால் உயிர் சேதம் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு அப்பகுதியில் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com