அரசு மேல்நிலைப்பள்ளியில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம்

கொள்ளிடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
அரசு மேல்நிலைப்பள்ளியில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம்
Published on

கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் துளசேந்திரபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் மற்றும் குடல் புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். ஆசிரியர் உதயகுமார் வரவேற்றார். டாக்டர்கள் சரவணன், ஷியாம் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான குடற்புழு நீக்க மாத்திரைகளை வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் குமார் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் வழங்கினார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவேல், சுகாதார ஆய்வாளர் கருணாகரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com