7 மாவட்டங்களில் பாதிப்பு குறைவு; தமிழகத்தில் 1,712 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் நேற்று 1,712 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
7 மாவட்டங்களில் பாதிப்பு குறைவு; தமிழகத்தில் 1,712 பேருக்கு கொரோனா
Published on

சென்னை,

நேற்று புதிதாக 35 ஆயிரத்து 326 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 1,020 பேரும், பெண்கள் 692 பேரும் உள்பட 1,712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 368 பேர், செங்கல்பட்டில் 177 பேர் உள்பட அனைத்து மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

இதில் 7 மாவட்டங்களில் 10-க்கும் குறைவானோர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 76 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 267 பேரும் நேற்று கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

உயிரிழப்பு இல்லை

தமிழகத்தில் கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை மேலும் நேற்றைய நிலவரப்படி 13 ஆயிரத்து 890 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக சென்னையில் 4 ஆயிரத்து 455 பேரும், செங்கல்பட்டில் 1,417 பேரும், கோவையில் 1,236 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் 658 பேர் ஆஸ்பத்திரி சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 2 ஆயிரத்து 106 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com