நாளை கிராம சபையில் நமது குரல் ஒலிக்கட்டும் - அண்ணாமலை அழைப்பு

வருங்கால தலைமுறையை பாதுகாக்க வேண்டிய மிக முக்கிய பொறுப்பு நமக்கு இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நாளை கிராம சபையில் நமது குரல் ஒலிக்கட்டும் - அண்ணாமலை அழைப்பு
Published on

சென்னை,

நாளை (ஆகஸ்ட் 15ம் தேதி), கிராம சபையில் நமது குரல் ஒலிக்கட்டும் என்றும், கருத்துகளை முன்வைப்போம். தீர்வுகளை உருவாக்குவோம். கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்போம். நமது கிராமத்தின் வளர்ச்சிக்குப் பணியாற்றுவோம் என்றும் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் வீடியோ பதிவு ஒன்றையும் டேக் செய்துள்ளார்.

மிக முக்கிய பொறுப்பு

முன்னதாக அவர் தனது எக்ஸ் வலை தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது;-

“நம் மண், நம் நீர், நம் காற்று இவை அனைத்தும் நமது அடுத்த தலைமுறைக்கு நாம் பாதுகாத்து வழங்க வேண்டிய பொக்கிஷங்கள். நம் தலைமுறையையும், வருங்கால தலைமுறையையும் பாதுகாக்க வேண்டிய மிக முக்கிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை முன்னெடுத்துச் செல்லும் வகையில், வரும் ஆகஸ்ட் 16, 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 3 மணிக்கு, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் நடைபெறும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியில், அனைவரும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

மரங்களை வளர்ப்போம், நீர்நிலைகளைப் பாதுகாப்போம். நமது செயல்களால் ஒரு பசுமையான தமிழகத்தை உருவாக்குவோம். சுற்றுச்சூழல் பாதுகாப்பை மக்கள் இயக்கமாக மாற்றுவோம். மாறுவோம். மாற்றுவோம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com