''வெளிநாட்டினரும் வந்து பார்க்கும் சுற்றுலாத் தலமாக செஞ்சி மலரட்டும்'' - கமல்ஹாசன்

தமிழ்நாட்டின் விழுப்புரத்தில் உள்ள செஞ்சி கோட்டையை உலகப் பராம்பரியச் சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ.
சென்னை,
செஞ்சிக் கோட்டையை உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி தருவதாக கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
''நம் பெருமைக்குரிய செஞ்சிக் கோட்டை 1921-ம் ஆண்டு தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. ஒரு நூற்றாண்டு கடந்த பிறகு இப்போது உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டிருப்பது மகிழ்வு தரும் செய்தி. இந்தியாவின் பிற பகுதியினரும் வெளிநாட்டினரும் வந்து பார்க்கும் சுற்றுலாத் தலமாக செஞ்சி மலரட்டும்'' இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கோட்டையை உலகப் பராம்பரியச் சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ.தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், கும்பகோணம் ஐராவதேஸ்வரர் கோவில், ஜெயகொண்டம் கங்கை கொண்ட சோழபுரம் கோவிkamaல், மாமல்லபுரம் நினைவுச் சின்னங்கள், நீலகிரி மலை ரயில் பாதை ஆகிய ஐந்தும் தமிழ்நாட்டில் யுனெஸ்கோ அங்கீகரித்த உலக பாரம்பரிய சின்னங்களாகும். இந்தப் பட்டியலில் ஆறாவது சின்னமாக செஞ்சிக் கோட்டை இடம் பிடித்துள்ளது.






