

சென்னை,
பாஜக மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
சஷ்டி திதியும் கார்த்திகை நட்சத்திரமும் கூடிய இந்த சுப தினத்தில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென்ற சங்கல்பத்தை எடுத்துக் கொண்டு, நாம் அனைவரும் இன்று (23-02-2026) நமது இல்லங்களிலும், கோவில்களிலும், தெருக்களிலும் “கந்த சஷ்டி கவசம்” பாடுவோம்.
பக்தியின் ஒளி பரவட்டும்!
வெற்றிவேல்..! வீரவேல்..!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.