

சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”ஆங்கிலேயர்களின் அடிமைத்தனத்தை எதிர்த்து துணிச்சலுடன் போராடிய சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ் மண்ணின் பெருமையையும், தமிழர்களின் வீரத்தையும் தனது எழுத்தின் மூலம் உலகறியச் செய்த புரட்சியாளருமான மகாகவி பாரதியாரின் நினைவுதினம் இன்று.
தேசவிடுதலை, மொழிப்பற்று, மனிதநேயம், சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் என சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் மாற்றத்திற்கான விதைகளை விதைத்து, அழியாத வரலாற்றை உருவாக்கிய மகாகவி பாரதியார் ஆற்றிய அரும்பெரும் பணிகளை எந்நாளும் நினைவில் வைத்து போற்றிடுவோம்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.