"தொழுநோய் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்" - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தொழுநோய் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Published on

சென்னை,

2025ஆம் ஆண்டுக்கு முன்பாகவே, தொழுநோய் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநில அளவில் தொழுநோய் ஒழிக்க தொண்டாற்றி வரும் தன்னார்வலர்கள், அரசு அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர்,

தொழுநோயை பொறுத்தவரை அன்னை தெரசாவின் அர்ப்பணிப்பை தவிர்த்து விட்டு, வேறொருவரின் அர்ப்பணிப்பை முதன்மைப்படுத்த முடியாது என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com