

சென்னை,
மத்திய இணை மந்திரி எல்.முருகன் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:-
அகண்ட பாரதத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த மாமனிதர், பாரதீய ஜனசங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு நாளில், அவரது சேவைகளையும் தியாகங்களையும் போற்றி வணங்குவோம்.
"ஒரே நாடு, ஒரே அரசியலமைப்பு, ஒரே தேசிய கொடி" என்ற உறுதியான தேசிய சிந்தனையை முன்னிறுத்தி, நாட்டின் ஒற்றுமைக்காக இறுதி வரை போராடிய அவரது தியாகமும் தேசப்பற்றும் தலைமுறைகளுக்கு என்றும் வழிகாட்டியாக இருக்கும்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ நீக்கிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியவர். அவரது உயரிய லட்சியங்களை பின்பற்றி, வலிமையான மற்றும் வளமான பாரதத்தை உருவாக்கிட உறுதியேற்போம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளர்.