மொழிப்போர் தீரர்களின் தியாகத்தைப் போற்றுவோம் - தவெக தலைவர் விஜய்


மொழிப்போர் தீரர்களின் தியாகத்தைப் போற்றுவோம் - தவெக தலைவர் விஜய்
x
தினத்தந்தி 25 Jan 2026 12:05 PM IST (Updated: 25 Jan 2026 1:00 PM IST)
t-max-icont-min-icon

செயல் வீரர்கள் கூட்டத்தில் மொழிப்போர் தியாகிகளின் உருவப் படங்களுக்கு விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை

மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றுள்ளார். மேடைக்கு வந்த விஜய்க்கு விசில் அடித்து தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்தி திணிப்பை எதிர்த்து போராடி உயிர் ஈந்தவர்களை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு செயல் வீரர்கள் கூட்டத்தில் மேடையில் வைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகிகளின் உருவப் படங்களுக்கு விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் தவெக கொள்கைத் தலைவர்களின் படங்களுக்கும் அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மொழிப்போர் தீரர்களின் தியாகத்தைப் போற்றுவோம். ஒப்பற்ற நம் அன்னைத் தமிழை உயிரெனக் காப்போம். வாழ்க தமிழ்! வளர்க தமிழ்! வெல்க தமிழ்!" என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story