மக்களாட்சியின் விழுமியங்களைப் பேணிக் காத்திட உறுதியேற்போம்: எடப்பாடி பழனிசாமி


மக்களாட்சியின் விழுமியங்களைப் பேணிக் காத்திட உறுதியேற்போம்: எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 26 Jan 2025 10:10 AM IST (Updated: 26 Jan 2025 11:27 AM IST)
t-max-icont-min-icon

குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது

சென்னை,

நாட்டின் 76-வது குடியரசு தினவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.இந்த நிலையில் குடியரசு தினத்தையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

சம உரிமை, சமூகநீதி, கூட்டாட்சி ஆகிய உயரிய நெறிகளைக் கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தை நம் நாடு ஏற்ற பொன்னாளான இந்த 76வது குடியரசு தினத்தில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மக்களாட்சியின் விழுமியங்களைப் பேணிக் காத்திட இந்நன்னாளில் உறுதியேற்போம்.என தெரிவித்துள்ளார் .

1 More update

Next Story