

சென்னை,
அண்ணல் நபிகள் நாயகம் பிறந்தநாளில், அவரது போதனைப்படி அமைதி தவழவும், சகோதரத்துவம் தழைக்கவும் அயராது உழைத்திட உறுதி ஏற்போம் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள இசுலாமிய மக்கள் நபிகள் நாயகம் முஹம்மதுவின் (ஸல்) பிறந்த நாளைக் குறிப்பிடும் வகையில் இன்று மிலாது நபி திருநாளைக் கொண்டாடுகின்றனர். இந்த நிலையில் மிலாது நபி தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
அண்ணல் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாளில், அவரது போதனைப்படி அன்பு பெருகவும், அமைதி தவழவும், சமரசம் உலவவும், சகோதரத்துவம் தழைக்கவும் அயராது உழைத்திட உறுதி ஏற்போம் எனக் கூறி, உலகம் முழுவதும் வாழும் இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த 'மிலாது நபி' வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.