

சென்னை,
தீரன் சின்னமலையின் 221-வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தனது உயிரையே தியாகம் செய்த விடுதலைப் போராட்ட வீரரும், தனது வீரத்தாலும் அசாத்தியமான போர்த் திறமையாலும் ஆங்கிலேயப் படைகளை விரட்டியடித்த பெருமைமிக்க மாவீரருமான தீரன் சின்னமலையின் நினைவுதினம் இன்று..
போர்க்களத்தில் ஆங்கிலேயப் படைகளால் வீழ்த்தவே முடியாத மாவீரராக வலம் வந்ததோடு , கொங்கு மண்ணின் பெருமையாகவும், தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகவும் திகழ்ந்த மாவீரன் தீரன் சின்னமலையின் துணிச்சலையும் தியாகத்தையும் நினைவில் வைத்து வணங்கிடுவோம்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.