ஒண்டிவீரனின் தியாகத்தையும் வீரத்தையும் போற்றி வணங்கிடுவோம் - டிடிவி தினகரன்

ஒண்டிவீரனின் தியாகத்தையும் வீரத்தையும் போற்றி வணங்கிடுவோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஒண்டிவீரனின் தியாகத்தையும் வீரத்தையும் போற்றி வணங்கிடுவோம் - டிடிவி தினகரன்
Published on

சென்னை,

ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு உயிர் தியாகம் செய்த முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரரான ஒண்டிவீரனின் 252-வது நினைவு நாள் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி அரசியில் கட்சி தலைவர்கள் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஒண்டிவீரனின் நினைவு தினத்தையொட்டி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "அந்நியர்கள்களிடம் அடிமையாய் இருந்து வாழ்வதை விட சண்டையிட்டு சாவது மேல் என வீரப்போர் புரிந்த மாமன்னர் பூலித்தேவனின் முதன்மை படைத்தளபதி மாவீரர் ஒண்டிவீரனின் நினைவு நாள் இன்று.

தன் நாட்டின் விடுதலைக்காக தனது கடைசி மூச்சுவரை களத்தில் நின்று ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு உயிர்நீத்த மாவீரர் ஒண்டிவீரனின் தியாகத்தையும் வீரத்தையும் போற்றி வணங்கிடுவோம்." என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com