

சென்னை,
முன்னாள் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட கழகம் எழும்பூர் வடக்கு பகுதி 78, 78அ வட்ட திமுக சார்பில் நடைபெற்ற "புத்தெழுச்சி நாள் விழா"வில் கலந்துகொண்டு, பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாணவ-மாணவியருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதில் மகிழ்ச்சி!
"கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, புதிய தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த 6 மாதம் டைம் கேட்டா சரி... நல்லது! ஆனால், அன்றாடம் நடக்கும் மின்வெட்டு பற்றி 6 மாசம் பேசக்கூடாது! த.வெ.க கட்சியினரால் பாதிக்கப்படும் பெண்களின் உணர்வுகள், பாதுகாப்பு பற்றி 6 மாசம் பேசக்கூடாது! பள்ளிகளுக்குள் அவர்கள் நடத்தும் அட்ராசிட்டி பற்றி பேசக்கூடாது என்றால் என்ன நியாயம் இது?
மக்களுக்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் திமுக என்றும் தொடர்ந்து பேசும்! கலைஞரின் வழியில் மக்கள் பணி செய்வோம்! கலைஞரின் வழியில் பேசுவோம்!
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.