நம் முன்னோர்களின் வீரத்தையும் தியாகத்தையும் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துரைப்போம் - நயினார் நாகேந்திரன்

கோப்புப்படம்
அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாரதத் தாயின் கைகளில் பூட்டப்பட்டிருந்த அடிமை விலங்கு அண்ணல் காந்தியடிகளின் அகிம்சை வழியாலும், மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இரும்புக் கரங்களாலும் அடித்து நொறுக்கப்பட்டு, 79 ஆண்டுகள் ஆகின்றன. நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க, பல லட்சக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரர்கள் தங்களின் இன்னுயிரை தியாகம் செய்தனர்.
நம் பாரதநாடு 79-வது சுந்தந்திர தினத்தைக் கொண்டாடும் இன்றைய நாளில், நம் முன்னோர்களின் வீரத்தையும் தியாகத்தையும் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துரைப்போம். ஜெய் ஹிந்த். பாரத் மாதா கி ஜே. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






