‘ஒவ்வொரு பெண்ணும் தனக்கான சிறகுகளைப் பெறுவதை உறுதி செய்வோம்’ - கமல்ஹாசன் மகளிர் தின வாழ்த்து

பெண்களுக்கு சம வாய்ப்புகளை பகிர்ந்தளிக்கையில் சமுதாயம் வெற்றி பெறுகிறது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
‘ஒவ்வொரு பெண்ணும் தனக்கான சிறகுகளைப் பெறுவதை உறுதி செய்வோம்’ - கமல்ஹாசன் மகளிர் தின வாழ்த்து
Published on

சென்னை,

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரைப் பிரபலங்களும் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில் கூறியிருப்பதாவது;-

“பெண்களுக்கு சம வாய்ப்புகளையும், சம அதிகாரத்தையும் பகிர்ந்தளிக்கையில் ஒட்டுமொத்த சமுதாயமும் வெற்றி பெறுகிறது. மகளிர் தங்கள் உரிமைகளுக்காகப் போராட வேண்டியிராத சமத்துவ உலகை உருவாக்குவோம். ஒவ்வொரு பெண்ணும் தனக்கான சிறகுகளைப் பெறுவதை உறுதி செய்வோம். பகிர்வோம், உயர்வோம்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com