

வத்தலகுண்டு,
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே நடகோட்டையில் ஒரு தனியார் நிறுவனம் சோலார் கம்பெனி அமைத்து வருகிறது. நடகோட்டையை சேர்ந்த பொதுமக்கள் பலர் தங்களது நிலங்களை சோலார் கம்பெனியினர் அபகரித்து விட்டதாக போராட்டங்கள் நடத்தினர்.
அதைத்தொடர்ந்து கடந்த மாதம் நாம் தமிழர் கட்சியினர் சோலார் கம்பெனி முன்பு ஆர்ப்பாட்டம் செய்ய வந்தபோது அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாலை நடகோட்டைக்கு வந்தார். பின்னர், அவர் ஊர் மக்களிடம் நடந்ததை கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
நடகோட்டை மக்களின் தொழில், ஆடு-மாடு மேய்ப்பது ஆகும். ஆடு மாடு மேய்க்கும் அவர்கள் நிலங்கள் மற்றும் குளங்கள் சூரிய ஒளி தயாரிக்கும் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் தொழில் செய்ய முடியவில்லை. இதுதொடர்பாக நாங்களும் ஒரு வழக்கு போட்டுள்ளோம். அந்த வழக்கு தீர்ப்பு வந்த பிறகு அடுத்தகட்டமாக நாங்கள் மக்களோடு மக்களாக நின்று போராடுவோம் .
இவ்வாறு அவர் தெரிவித்தார்.