அய்யா வைகுண்டர் வழி நடப்போம் - அண்ணாமலை

அறநெறிகளை மக்களிடம் விதைத்தவர் அய்யா வைகுண்டர் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அய்யா வைகுண்டர் வழி நடப்போம் - அண்ணாமலை
Published on

சென்னை,

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

சமூகத்தில் ஏற்றத்தாழ்வு நீக்கி, சமத்துவமும், சமாதானமும் நிலவ வேண்டும் என்று போதித்த, மகான் அய்யா வைகுண்டரின் 194 ஆவது அவதார தினம் இன்று.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடியவர். அன்பு, அறிவு, சமதர்மம், ஆன்மீகம் ஆகியவற்றை வாழ்வியல் நெறியாக கற்றுக் கொடுத்தவர். ஜாதி, மத வேறுபாடுகளை கடந்து, அனைவரும் சமம் என்று வலியுறுத்தி, சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதை, அச்சமின்மை ஆகிய அறநெறிகளை மக்களிடம் விதைத்தவர் அய்யா வைகுண்டர்.

அய்யா வைகுண்டரின் அவதார தினமான இன்று, ஏற்றத் தாழ்வற்ற, அமைதியான, சமத்துவ சமூகத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதியேற்போம். அய்யா வைகுண்டர் வழி நடப்போம்.

அய்யா உண்டு!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com