தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு தலைநகராக உயர்த்துவோம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

பார்முலா 4 கார் பந்தயத்தை வெற்றியடையச் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டுகள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

சென்னை தீவுத்திடலில் நேற்று முன்தினம் தொடங்கிய பார்முலா 4 கார் பந்தயம் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் பார்முலா 4 கார் பந்தயத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

பார்முலா 4 கார் பந்தயத்தை அமோக வெற்றியடையச் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஒட்டுமொத்த குழுவிற்கும் மாபெரும் பாராட்டுகள்!

செஸ் ஒலிம்பியாட், சென்னை ஓபன் 2023, ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023, தமிழ்நாடு சர்வதேச சர்ப் ஓபன் 2023, ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2023 மற்றும் கேலோ இந்தியா ஆகியவற்றை வெற்றியாய் நடத்தி முடித்து, தமிழகம் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குகிறது. உலகத் தரம் வாய்ந்த வசதிகள் மற்றும் மூலோபாய முதலீடுகளுடன், நாங்கள் நிகழ்வுகளை மட்டும் நடத்தவில்லை - இந்திய விளையாட்டுகளின் எதிர்காலத்திற்கு முன்னோடியாக இருக்கிறோம். அதனால்தான் இந்தியாவின் ஒலிம்பிக் குழுவில் தமிழகம் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது.

வரம்புகளை உயர்த்தி, தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக உயர்த்துவோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com