ஒண்டிவீரனின் தேசப்பற்றையும், தியாக உணர்வையும் போற்றி வணங்குவோம்: டி.டி.வி. தினகரன்

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
ஒண்டிவீரனின் தேசப்பற்றையும், தியாக உணர்வையும் போற்றி வணங்குவோம்: டி.டி.வி. தினகரன்
Published on

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

ஆங்கிலேயர்களுக்கு வரிகட்ட மறுத்து அவர்களுடனான சுதந்திரப்போரில் வெற்றிவாகை சூடியவரும், போர்க்களத்தில் ஈடு இணையற்ற வீரராகவும் திகழ்ந்த நெல்லைச் சீமையின் மாவீரர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவு தினம் இன்று.

தேசத்தின் நலனுக்காகவும், மக்களின் பாதுகாப்பிற்காகவும் அந்நியப் படைகளை துணிச்சலுடன் எதிர்கொண்டு வீரமரணமடைந்த ஒண்டிவீரன் அவர்களின் தேசப்பற்றையும், தியாக உணர்வையும் எந்நாளும் போற்றி வணங்குவோம்.என தெரிவித்துள்ளார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com