அஞ்சலை அம்மாள் புகழைப் போற்றுவோம்: ஆதவ் அர்ஜுனா


அஞ்சலை அம்மாள் புகழைப் போற்றுவோம்: ஆதவ் அர்ஜுனா
x

தமிழக விடுதலைப் போராட்ட வரலாற்றின் தனிப்பெரும் ஆளுமை அஞ்சலை அம்மாள் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்

சென்னை,

தவெக தேர்தல் பிரசார மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்னாஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

விடுதலை எனும் உணர்வில் தீராத வேட்கையும், மக்கள் சேவை என்ற மாண்பில் சமரசமற்ற அர்ப்பணிப்பும் கொண்டு, தம் வாழ்வை அதற்காகவே ஒப்படைத்தவர் மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள். மது ஒழிப்பை வலியுறுத்தி மாபெரும் மக்கள் போராட்டங்களை நடத்திய முன்னோடிகளில் ஒருவர். தமிழக விடுதலைப் போராட்ட வரலாற்றின் தனிப்பெரும் ஆளுமை, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர் மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் பிறந்தநாளான இன்று, அவர் புகழைப் போற்றுவோம். அவரின், சமரசமற்ற இலட்சிய வாழ்வின் வழி பயணிக்க உறுதியேற்போம். என தெரிவித்துள்ளார் .

1 More update

Next Story