தொண்டர்களை ஒன்றிணைப்போம்: அதிமுகவை வெற்றியடைய செய்வோம்- ஓபிஎஸ் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற நிலையை மீண்டும் உருவாக்கப்படும் எனவும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
தொண்டர்களை ஒன்றிணைப்போம்: அதிமுகவை வெற்றியடைய செய்வோம்- ஓபிஎஸ் தலைமையில் உறுதிமொழி ஏற்பு
Published on

சென்னை,

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அருங்காட்சியகம் அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்றபடி ஓபிஎஸ் உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.

*தொண்டர்களை ஒன்றிணைப்போம் அதிமுகவை வெற்றியடைய செய்வோம்

*ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு ஓபிஎஸ் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

*அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற நிலையை மீண்டும் உருவாக்கப்படும் எனவும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com