புதிய வரலாற்றை எழுதுவோம் - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு

இளைஞர்களே நீங்கள்தான் எதிர்காலம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதிய வரலாற்றை எழுதுவோம் - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு
Published on

சென்னை,

தி.மு.க இளைஞர் அணியின் மாவட்ட மாநகர - மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்கள் சில நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்திற்கு, இளைஞர்களே நீங்கள்தான் எதிர்காலம்!

இனி நம் plan and execution-ஐ upgrade செய்வோம். ஆக்கப்பூர்வமான அரசியல் உரையாடல்களை நிகழ்த்துங்கள்!

புதிய வரலாற்றை எழுதுவோம்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com