

சென்னை,
தூத்துக்குடி - பாலக்காடு இடையே இயக்கப்பட்டு வரும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலில் புத்தம் புதிய எல்.எச்.பி. பெட்டிகள் இணைக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
”தூத்துக்குடியில் இருந்து பாலக்காடு செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16791) ரெயிலில் ஜூலை 20-ந் தேதி முதல் எல்.எச்.பி. பெட்டிகள் இணைக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில், பாலக்காட்டில் இருந்து தூத்துக்குடி வரும் ரெயிலில் ஜூலை 21-ந் தேதி முதல் எல்.எச்.பி. பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
அதாவது, 1 மூன்றாம் வகுப்பு ஏ.சி. பெட்டி, 5 தூங்கும் வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 1 சரக்கு பெட்டி இணைக்கப்பட்டிருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.