மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே.4 -ம் தேதி கிடைக்கும்: சிடிஆர் நிர்மல் குமார் நம்பிக்கை

போக்குவரத்துத் துறையிலிருந்த முக்கிய அதிகாரிகளைக் கொண்டு பெரும்பாலான இடங்களில் பேருந்துகளை நிறுத்தியுள்ளனர்.
மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே.4 -ம் தேதி கிடைக்கும்: சிடிஆர் நிர்மல் குமார் நம்பிக்கை
Published on

தவெக இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, "பேருந்து வசதி வேண்டுமென்றே தடை செய்யப்பட்டது. இந்தத் தேர்தலை நடத்திய ஒரு சில அதிகாரிகள்தான். ஸ்டாலினுக்கும் உதயநிதிக்கும் தேர்தல் என்றால் என்னவென்றே தெரியாது. அவர்கள் இருவருக்கும் பின்னணியாகச் செயல்பட்ட இதுபோன்ற அதிகாரிகள்தான்.

போக்குவரத்துத் துறையிலிருந்த முக்கிய அதிகாரிகளைக் கொண்டு பெரும்பாலான இடங்களில் பேருந்துகளை நிறுத்தியுள்ளனர். குறைந்தபட்சம் 20 லட்சம் பேராவது வாக்களிக்க விடாமல் செய்துள்ளனர். இது ஒரு மோசமான செயல்.இதில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். /கண்டிப்பாக, ஒரு பெரிய மாற்றம் வரும். 40 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றிய ஒரு கும்பலிடமிருந்து விடுதலை கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொரு இடத்திலும் மக்கள் வாக்களித்துள்ளனர். அவர்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்" என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com