தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் அகமது இக்பால் தலைமை தாங்கினார். வணிகர் அணி மாவட்ட அமைப்பாளர் சுலைமான் முன்னிலை வகித்தார். இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் காஜா மைதீன் வரவேற்று பேசினார். திராவிடர் விடுதலை கழக பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் பாலஸ்தீனம் காசாவில் இஸ்ரேலின் தாக்குதால் அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர். இஸ்ரேலின் இனஅழிப்பு போரை உலக நாடுகள் நிறுத்த வேண்டும், இஸ்ரேலை பயங்கரவாத போர்க்குற்ற நாடாக சர்வதேச நீதிமன்றத்தில் ஐ.நா நிறுத்த வேண்டும், இதனை இந்திய அரசு முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் செய்யது சம்சுதீன், த.மு.மு.க. மாவட்ட பொறுப்புக்குழு ஜனோபர் அலி, தாயக மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் அகமது, விடுதலை சிறுத்தைகள் கட்சி காயல்பட்டினம் நகர செயலாளர் அல்அமீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com