விடுதலை சிறுத்தைகள் கட்சி தெருமுனை பிரசார கூட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது
விடுதலை சிறுத்தைகள் கட்சி தெருமுனை பிரசார கூட்டம்
Published on

தூத்துக்குடி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு, வேலையின்மை உள்ளிட்டவற்றை கண்டித்து தெருமுனை பிரசார கூட்டம் தாளமுத்துநகர் மெயின் ரோட்டில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் அகமது இக்பால் தலைமை தாங்கி, கட்சி கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட பொருளாளர் ஆறுமுகநயினார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிறுத்தை குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் ஞானசேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சங்கரன், தமிழ்புலிகள் கட்சி பரப்புரை செயலாளர் கத்தார் பாலு, புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர் சுஜித் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் காஜா, மத்திய மாவட்ட வணிகர் அமைப்பாளர் சுலைமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com