விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

திருச்செந்தூர்:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்தநாளையொட்டி, அவரது கட்சி சார்பில் திருச்செந்தூர் நகராட்சி பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அந்த போஸ்டரில் மர்மநபர்கள் சாணத்தை பூசி உள்ளனர். இதை கண்டித்து திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் முரசு தமிழப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com