விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அம்பேத்கர் சிலை மற்றும் படத்துக்கு காவி, திருநீறு, குங்குமம் இடுவதை கண்டித்தும், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் டேனி அருள் சிங் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் குழந்தை வள்ளுவன், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் காசி சிவகுருநாதன், மாவட்ட துணைச் செயலாளர் சித்திக், தென்காசி தொகுதி செயலாளர் செல்வம், செய்தி தொடர்பாளர் சந்திரன், ஒன்றிய செயலாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கலை இலக்கிய பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com