விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருமருகலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

திட்டச்சேரி:

திருமருகல் சந்தைப்பேட்டை கடைத்தெருவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கதிர்நிலவன், மாவட்ட துணை செயலாளர்கள் பேரறிவாளன், சாதிக், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் ராஜேந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொருளாளர் கணேசன் மூர்த்தி வரவேற்றார். திருமருகல் ஒன்றியத்தில் கிராம நிர்வாக உதவியாளர் பணி நியமன முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமருகலில் உதவி மருத்துவர், உதவி ஆய்வாளர், உதவி பராமரிப்பாளர் யாரும் இன்றி செயல்படும் கால்நடை ஆஸ்பத்திரியில் உடனடியாக பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஒன்றிய துணை செயலாளர்கள் நடராஜன், அருண், வீரசெந்தில், ஜவகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் தொண்டரணி ஒன்றிய துணை அமைப்பாளர் தலித் பாட்ஷா நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com