எல்.ஐ.சி. பணம் ரூ.3.22 லட்சம் மோசடி வழக்கு: ஓய்வுபெற்ற தபால்காரர் கைது

சென்னையில் எல்.ஐ.சி. பாலிசிதாரர் ஒருவரின் முதிர்வுத் தொகையான ரூ.3.22 லட்சத்தை போலி ஆவணங்கள் தயாரித்து ஆள்மாறாட்டம் மூலம் சிலர் அபகரித்ததாக புகார் எழுந்தது.
ஓய்வுபெற்ற தபால்காரர் கைது.
Published on: 

சென்னை,

சென்னையில் எல்.ஐ.சி. பணம் ரூ.3.22 லட்சம் மோசடி வழக்கில் ஓய்வுபெற்ற தபால்காரரை போலீசார் கைது செய்தனர்.

எல்.ஐ.சி. பணம் ரூ.3.22 லட்சம் மோசடி

சென்னையில் எல்.ஐ.சி. பாலிசிதாரர் விஜயகுமாரின் முதிர்வுத் தொகையான ரூ.3.22 லட்சத்தை போலி ஆவணங்கள் தயாரித்து ஆள்மாறாட்டம் மூலம் அபகரித்ததாக கடந்த 2009-ம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

ஓய்வுபெற்ற தபால்காரர் கைது

இந்த வழக்கில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த மணலியை சேர்ந்த ஓய்வு பெற்ற தபால்காரர் ராமமூர்த்தி (வயது 64) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். 17 ஆண்டுகளுக்கு பிறகு அவர் சிக்கியுள்ளார்.

X